Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் யார்?

27 கார்த்திகை 2025 வியாழன் 15:10 | பார்வைகள் : 207


பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்களை அதிகம் கவர்ந்து தற்போது ஒன்பதாவது சீசனாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் 8-ஆவது வாரத்தை எட்டியுள்ளது.இந்த சீசனில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய வாட்டர் மெலன் ஸ்டார் என்று கூறப்படும் திவாகர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக போட்டியிலிருந்து யாரை வெளியேற்றலாம் என்பது குறித்த வாக்கெடுப்பு போட்டியாளர்களிடையே நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த முறையில் ஒரு போட்டியாளர் 2 நபர்களை தேர்வு செய்யலாம்.அனைத்து போட்டியாளர்களும் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இறுதி முடிவினை பிக் பாஸ் அறிவிப்பார். அதேபோன்று பார்வையாளர்களும் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களிக்கலாம்.குறைந்த வாக்குகளை பெறுவோர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதுவரை பிக் பாஸ் சீசன் 9 சீசனில் இருந்து இயக்குனர் பிரவீன் காந்தி, திவாகர், கலையரசன், பிரவீன், ஆதிரா, அப்சரா, நந்தினி, கெமி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த முறை வெளியேற்றப்படக்கூடியவர்கள் பட்டியலில் சான்ட்ரா, பிரஜின், திவ்யா கணேசன், அமித் பார்கவ், அரோரா சின்க்ளேர், வி.ஜே பார்வதி ஆகியோர் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்