Paristamil Navigation Paristamil advert login

இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை!

இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை!

27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 114


பாகிஸ்தானில் பிறந்த ஒரு குழந்தை இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்துள்ளமை மருத்து உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

உலகிலேயே 60 லட்சத்தில் ஒரு பிறப்பில் மட்டுமே காணப்படும் மிகவும் அரிய வகை பிறப்புக் குறைபாடான 'டைஃபாலியா' காரணமாக 2 ஆணுறுப்புகளுடன் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

 

இரண்டின் வடிவமும் சாதாரணமாகவே இருந்தது. ஒன்றின் நீளம் 2.5 செ.மீ. மற்றொன்றின் நீளம் 1.5 செ.மீ. ஆக இருந்தது. மேலும், இரண்டுக்கும் தனித்தனி சிறுநீர் குழாய் திறப்புகள் இருந்தன.

 

குழந்தை இரண்டு பிறப்புறுப்புகள் வழியாகவும் சிறுநீர் கழிக்க முடிந்தது. ஸ்கேன் பரிசோதனையில் இரண்டு சிறுநீர் குழாய்கள் ஒரே சிறுநீர்ப் பையில் இணைந்திருந்தது தெரியவந்தது.

 

ஆனால் பிறக்கும்போதே அந்தக் குழந்தைக்கு மலக்குடலில் திறப்பு இல்லை என்பதும் ஒரு அதிர்ச்சியான தகவல். இந்த நிலையில் முதலில் குழந்தைக்கு உணவு செரிமானம் மற்றும் கழிவுகள் வெளியேற்றத்தில் இருந்த சிக்கல்களை சரிசெய்ய மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

 

அதன்பின் குழந்தையின் ஒரு ஆணுறுப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

 

கர்ப்ப காலத்தின் 3வது மற்றும் 6வது வாரங்களுக்கு இடையில் ஏற்படும் வளர்ச்சி கோளாறுகளால் இதுபோன்ற நிகழ்வு நிகழலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்