Paristamil Navigation Paristamil advert login

2030 காமன்வெல்த் போட்டி இந்த இந்திய நகரில் தான் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

2030 காமன்வெல்த் போட்டி இந்த இந்திய நகரில் தான் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 117


2030 காமன்வெல்த் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

72 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெறும் காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக்கிற்கு அடுத்தப்படியாக, காமன்வெல்த் போட்டிகள் உலகளவில் இரண்டாவது பெரிய பன்னாட்டு விளையாட்டு ஆகும்.

2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த இந்திய அரசு ஆர்வம் காட்டி அதற்கு விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், இன்று கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு பொதுக் கூட்டத்தில், 2030 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த ஆர்வம் காட்டி வரும் இந்திய அரசு, அதற்கான முன்னோட்டமாக இதனை கருதுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்