இலங்கையில் சீரற்ற காலநிலை - உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு – புதிய திகதிகள் அறிவிப்பு
27 கார்த்திகை 2025 வியாழன் 08:07 | பார்வைகள் : 823
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றும், நாளையும் உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாளை மறுதினமும் பரீட்சைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் ஒன்பது ஆகிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று (27) நடைபெறவிருந்த பரீட்சை – டிசம்பர் 07 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பரீட்சை – டிசம்பர் 08 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பரீட்சை – டிசம்பர் 09 ஆம் திகதியும் நடைபெறும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan