Paristamil Navigation Paristamil advert login

இளையராஜாவுக்கு 'கருத்த மச்சான்' பாடல் டிரெண்டால் என்ன பாதிப்பு?

இளையராஜாவுக்கு 'கருத்த மச்சான்' பாடல் டிரெண்டால்  என்ன பாதிப்பு?

26 கார்த்திகை 2025 புதன் 15:32 | பார்வைகள் : 183


சமீபத்தில் வெளியான 'டியூட்' திரைப்படத்தில் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தீபாவளிக்கு வெளியான 'டியூட்' திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'கருத்த மச்சான்' மற்றும் 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த '100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு' ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும். பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில், தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை தங்களிடம் உள்ளது. எக்கோ நிறுவனம், தங்கள் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

டியூட்' திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில், பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், சோனி நிறுவனத்திடம் இருந்து அனுமதியை பெற்று, இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார். பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது என நீதிபதி குறிப்பிட்டார்.
 

மேலும், படம் திரையரங்கிலும் ஓ.டி.டி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன் என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்