Paristamil Navigation Paristamil advert login

‘பிசாசு 2’ படத்தின் நிர்வாண காட்சி குறித்து ஆண்ட்ரியா!

‘பிசாசு 2’ படத்தின் நிர்வாண காட்சி குறித்து ஆண்ட்ரியா!

26 கார்த்திகை 2025 புதன் 15:32 | பார்வைகள் : 191


தமிழ் சினிமாவில் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது அடுத்தடுத்த படங்களின் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ‘மாஸ்க்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்தது ‘மனுஷி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற படத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2014 இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் ‘பிசாசு 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் நடந்த பேட்டியில் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “ஆரம்பத்தில் இந்த படத்தில் நிர்வாண காட்சி சேர்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பின் போது அந்த காட்சியை மிஸ்கின் முழுவதுமாக நீக்கிவிட்டார். இந்த படத்தில் யாரும் நிர்வாணமாக நடிக்கவில்லை. மிஸ்கின் சார் ‘பிசாசு 2’ படத்தை வெறும் படமாக மட்டும் எடுக்கவில்லை. அவர் ஏற்கனவே பெரிய நடிகர்களுடன் பணியாற்றி தன்னை நிரூபித்தவர். அவ்வளவு திறமையான இயக்குனர் என்னை அணுகியதால் அவருடைய பார்வையையும் ஒவ்வொரு காட்சிக்கு பின்னால் இருக்கும் ஆழத்தையும் நான் நம்பினேன்” என்று

ஆரம்பத்தில் பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியாவை இயக்குனர் மிஷ்கின் நிர்வாணமாக நடிக்க சொன்னதாகவும் அதற்கு ஆண்ட்ரியா மறுத்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் படத்திற்கு அதுபோன்ற காட்சி தேவைப்பட்டதால் அந்த காட்சியை படமாக்க வேண்டியதாக இருந்தது என்று மிஸ்கின் கூறி இருந்தார். ஆனால் அதன் பிறகு பலரும் இதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடும் என்பதால் அந்த காட்சியை நீக்கி விட்டதாகவும் மிஸ்கின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்