வடக்கு கிழக்கில் அனைத்து கடைகளுமே மூடப்பட வேண்டும் என கோரிக்கை
26 கார்த்திகை 2025 புதன் 11:16 | பார்வைகள் : 293
நவம்பர் 27ஆம் திகதி அன்று வடக்கு கிழக்கில் அனைத்து கடைகளுமே மூடப்பட வேண்டும் என தாயக செயலணி கோரிக்கை முன்வைத்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, ” நாளைய தினம், அதாவது மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதி அன்று வடக்கு கிழக்கில் அனைத்து கடைகளுமே மூடப்பட வேண்டும்.
வழமையாகவே, மாவீரர் நாளன்று கடையடைப்பு மேற்கொள்ளப்படும். எனவே இம்முறையும் அது இடம்பெற வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
அதேவேளை, மாவீரர் நாள் தொடர்பில் முன்னாள் போராளி மு.மனோகரன் யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பில், |தேசியத்தலைமையை நேசிக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகள் முன்னாள் போராளிகள் இந்த விடயத்தில் தங்களது முடிவை உடனடியாகக் கிளிநொச்சிக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றேன்” என கோரியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan