குழப்பத்தில் ரஜினி படம்
26 கார்த்திகை 2025 புதன் 10:42 | பார்வைகள் : 735
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்க 'பார்க்கிங்' பாலகிருஷ்ணனும், 'மகாராஜா' நித்திலுனும் ஆசைப்படுகிறார்கள். இவர்கள் இருவருமே ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். அதை பொறுமையாக கேட்ட ரஜினிகாந்த் இன்னமும் பதில் சொல்லவில்லை. சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த ஒரு சினிமா பூஜையில் இருவருமே கலந்து கொண்டனர். அப்போது இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினி படம் எப்போது என்று ஆர்வமாக கேட்டனர். ஆனால், இருவருமே சிரித்தபடி நகர்ந்தனர். நெருங்கிய நண்பர்களுடனிடம் மட்டும் ரிசல்ட்டுக்காக காத்திருப்பதாக கூறினர்.
பார்க்கிங் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் பாலகிருஷ்ணன். அந்த படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது. ஆனாலும், அவர் அடுத்த படத்தை தொடங்கவில்லை. சிம்புவை வைத்து பாலகிருஷ்ணன் இயக்க இருந்த படம் டிராப் ஆகி உள்ளது. அதேபோல், மகாராஜா என்ற வெற்றி படம் கொடுத்தாலும் விஜய்சேதுபதி உட்பட யாரையும் வைத்து இன்னமும் படம் இயக்கும் பணியை தொடங்கவில்லை நித்திலன். இவர்கள் இருவரும் அடுத்த படத்துக்காக பல மாதங்கள் போராடி வருகிறார்கள். முதல் படத்தில் இவர்கள் பெரிய சம்பளமும் வாங்கவில்லை. இந்த சூழ்நிலையில் இவர்களிடம் ரஜினி கதை கேட்டுள்ளார். இவர்களில் யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்குமா? வேறு இயக்குனர் ரஜினி படத்தை இயக்குகிறாரா என்பது, ரஜினியின் 75வது பிறந்தநாளான டிசம்பர் 12க்குள் தெரிந்துவிடும் என்கிறார்கள் கோலிவுட்டில்-------
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan