Paristamil Navigation Paristamil advert login

ஜிம்பாப்வேயை நொறுக்கி இலங்கை அணி....! ஆனாலும் இறுதிப்போட்டிக்கு சிக்கல்

 ஜிம்பாப்வேயை நொறுக்கி இலங்கை அணி....! ஆனாலும் இறுதிப்போட்டிக்கு சிக்கல்

26 கார்த்திகை 2025 புதன் 07:45 | பார்வைகள் : 104


முத்தரப்பு டி20 தொடரில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

ராவல்பிண்டியில் நடந்த டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் ஆடியது.

பென்னெட் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சிக்கந்தர் ரஸா 29 பந்துகளில் 37 ஓட்டங்களும், ரியான் பர்ல் 26 பந்துகளில் 37 ஓட்டங்களும் விளாச ஜிம்பாப்வே அணி 146 ஓட்டங்கள் எடுத்தது. ஹசரங்கா, தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகளும், ஷானகா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இலங்கை 16.2 ஓவர்களில் 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பதும் நிசங்கா ஆட்டமிழக்காமல் 58 பந்துக்களில் 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்கள் விளாசினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் உள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

ஏனெனில், ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி (-1.324) ஜிம்பாப்வேக்கு (-0.522) கீழே உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்