Paristamil Navigation Paristamil advert login

ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு துரோகம் செய்த காதலர்? வைரலாகும் பெண் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

 ஸ்ம்ரிதி மந்தனாவிற்கு துரோகம் செய்த காதலர்? வைரலாகும் பெண் வெளியிட்ட ஸ்க்ரீன் ஷாட்

26 கார்த்திகை 2025 புதன் 07:45 | பார்வைகள் : 107


பெண் ஒருவர் ஸ்ம்ரிதி மந்தனாவின் காதலர் பலாஷ் முச்சலுடன் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்திய மகளிர் கிரிக்கெட் முன்னணி வீராங்கனையாக வலம் வருபவர் ஸ்ம்ரிதி மந்தனா.

ஸ்ம்ரிதி மந்தனாவும், பாலிவுட் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.  

இதனையடுத்து, ஸ்மிருதியின் சொந்த ஊரான சாங்லியில் கடந்த 23 ஆம் திகதி இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

ஆனால் திருமணத்தன்று தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், திருமணம் திகதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

இதனைத்தொடர்ந்து, பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் மேரி டி'கோஸ்டா என்ற பெண், பலாஷ் முச்சலுடன் உரையாடிய ஸ்க்ரீன் ஷாட்களை தனது ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

இதில், மும்பையில் உள்ள வெர்சோவா கடற்கரையில் மேரியை அதிகாலை 5 மணிக்கு தன்னைச் சந்திக்க அழைத்தது, நீச்சல் மற்றும் ஸ்பாவிற்கு செல்லலாம் என பலாஷ் அழைப்பு விடுத்தது உள்ளது.

மேலும், "நீங்கள் ஸ்மிருதியை காதலிக்கிறீர்களா?" என அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு, "லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்" என மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

இந்த ஸ்க்ரீன் ஷாட்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஸ்ம்ரிதி மந்தனா தனது திருமணம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.

சக வீராங்கனைகளான ஜெமிமா மற்றும் ஷ்ரேயங்காவும் திருமண கொண்டாட்டம் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளனர்.

இதன் காரணமாக, "திருமணம் நிறுத்தப்பட்டதற்கு தந்தையின் உடல்நலக்குறைவு தான் காரணமா இல்லை பலாஷ் துரோகம் செய்து விட்டாரா?, ஏன் புகைப்படங்களை நீக்க வேண்டும்?" என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்