Paristamil Navigation Paristamil advert login

460 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

 460 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

26 கார்த்திகை 2025 புதன் 06:45 | பார்வைகள் : 819


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது ஒரே இரவில் குறைந்தது 460 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பல மால்டோவா அல்லது ருமேனியாவிற்குள் பறந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலென்ஸ்கி 25.11.2025 அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை அனைத்து கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாது எனவும் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஆக்கிரமிப்பாளர் மீதான தடை அழுத்தம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் ஆயுதங்களும் வான் பாதுகாப்பும் முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.     

வர்த்தக‌ விளம்பரங்கள்