இலங்கையில் விரைவில் ஏற்படவுள்ள கல்வி மறுசீரமைப்புக்கள்
25 கார்த்திகை 2025 செவ்வாய் 16:00 | பார்வைகள் : 297
கல்வித்துறையில் பல சவால்கள் காணப்படுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். சிறந்த மாற்றத்துக்குள் பிரவேசிக்கும் போது சவால்கள் தோற்றம் பெறும். புதிய கல்வி மறுசீரமைப்பை 2026 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தும் போது தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் தோற்றம் பெறும். அவற்றை சிறந்த முறையில் எதிர்க்கொள்வதற்கு கல்வித்துறையை தயார்படுத்த வேண்டும் என பிரதமரும், கல்வி மற்றும் உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
சிறந்த கல்வி முறைமையை உருவாக்க வேண்டுமாயின் கல்வி மறுசீரமைப்புக்கள் உறுதியான கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும். உருவாக்கப்படும் கொள்கையை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு வலுவான நிறுவன கட்டமைப்பு அவசியமானதாகும்.கல்வி மறுசீரமைப்புக்கும், அதனை அமுல்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை உருவாக்கவும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி மறுசீரமைப்புக்கள் உரிய காலத்தில் அமுல்படுத்தாத காரணத்தால் கல்வித்துறை இன்று பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.சகல பிரச்சினைகளுக்கும் மத்தியிலும், அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வியியலாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள்.இதனால் இலவச கல்வி துறை முன்னேற்றமடைந்துள்ளது. ஆகவே அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி மறுசீரமைப்புக்கு இந்த ஆண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நான்கு கட்டமாக புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் பற்றி எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பியிருந்தார்கள்.இந்த பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கல் பற்றி கேள்வியெழுப்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு மாத்திரம் 7.04 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களை காட்டிலும் பாரியதொரு ஒதுக்கீடாகும். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வருடத்திலேயே கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்குவதாக நாங்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை.அதேபோல் புதிய கல்வி மறுசீரமைப்புக்காக மாத்திரம் 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் பல சவால்கள் காணப்படுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.சிறந்த மாற்றத்துக்குள் பிரவேசிக்கும் போது சவால்கள் தோற்றம் பெறும். புதிய கல்வி மறுசீரமைப்பை 2026 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தும் போது தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் தோற்றம் பெறும்.அவற்றை சிறந்த முறையில் எதிர்க்கொள்வதற்கு கல்வித்துறையை தயார்படுத்த வேண்டும்.
சிறந்த திட்டமிடமிடலுடன் புதிய கல்வி மறுசீரமைப்பு அமுல்படுத்தப்படுகிறது. இது பிள்ளைகளின் சிறந்த எதிர்காலத்தை அடி ப்படையாகக் கொண்டது. ஆகவே தோற்றம் பெறும் சவால்களுக்கு தீர்வு காண அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan