கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்
25 கார்த்திகை 2025 செவ்வாய் 14:36 | பார்வைகள் : 1148
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan