அவுஸ்திரேலியாவின் செனட் சபைக்குள் பர்தா அணிந்து வந்த பெண்
25 கார்த்திகை 2025 செவ்வாய் 11:51 | பார்வைகள் : 711
அவுஸ்திரேலியாவின் செனட் சபை 24.11.2025 ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தீவிர வலதுசாரி செனட்டர் பௌலின் ஹான்சன் பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் சபைக்குள் முக மறைப்பை அகற்ற மறுத்துவிட்டமையால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்றைய அமர்வில் இருந்து அவர் நாள் முழுவதும் விலக்கிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது செயல்களை அனைத்து கட்சிகளின் செனட்டர்களும் பரவலாகக் கண்டித்துள்ளனர்.
செனட்டர் பௌலின் ஹான்சனின் செயல் அவமரியாதைக்குரியது என பிற செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பெண்கள் தவறாக நடத்தப்படுவதை முன்னிலைப்படுத்தவே பர்தா அணிந்திருந்ததாக பௌலின் ஹான்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பல்வேறு தரப்பில் இருந்து பரவலான விமர்சனங்களை கொண்டுவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan