சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி!
25 கார்த்திகை 2025 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 207
சிம்புவின் 49-வது திரைப்படம் அரசன். இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இதனை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் சிம்புவும், வெற்றிமாறனும் முதன்முறையாக கூட்டணி அமைக்கிறார்கள். இப்படத்தில் சிம்பு, அரசன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. அத்துடன் படத்தின் புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. அதில் ஃபங் வைத்துக் கொண்டு யங் லுக்கில் காட்சியளித்தார் சிம்பு.
இந்த புரோமோ வீடியோ மூலம் இயக்குநர் நெல்சனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. அரசன் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆனாலும் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இதுபற்றி அண்மையில் விளக்கம் அளித்த வெற்றிமாறன் மாஸ்க் பட ரிலீசுக்கு பின்னர் அரசன் ஷூட்டிங் தொடங்கும் என அறிவித்தார். இந்த நிலையில், அரசன் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி அரசன் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் வாத்தியார் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் வட சென்னை திரைப்படத்தை இயக்கியபோது அதில் அமீர் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில், வட சென்னை யூனிவர்ஸில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி உள்ளதால், அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஒருவேளை சிம்புவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கப்போகிறாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. சிம்புவுடன் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த விஜய் சேதுபதி, அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan