நடிகை கீர்த்தி ஷெட்டி இயக்குனர் அவதாரம் எடுக்கிறாரா ?
25 கார்த்திகை 2025 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 161
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான கிர்த்தி ஷெட்டி, தெலுங்கில் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணியில் திகழ்கிறார். தமிழில் கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி மோகனுடன் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய பல படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் படம் இயக்கும் ஆர்வமும் அவருக்குள் அதிகரித்து வருகிறது.
இதுபற்றி கிர்த்தி ஷெட்டி கூறியதாவது: ஒரு சினிமா ரசிகையாக, இந்தப் படம் மக்களுக்கு பிடிக்குமா, இது ஒரு புதிய விஷயமா இருக்கும் என்கிற கோணத்தில் கதைகளை தேர்வு செய்கிறேன். என்னை மேலும் மேம்படுத்திக்கொள்ள கிளாசிக்கல், வெஸ்டர்ன் போன்ற நடன வகைகளை கற்றுக்கொண்டு வருகிறேன். பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற ஆக்ஷன் பயிற்சிகளையும் எடுத்துக்கொள்கிறேன். ஆக்ஷன் படங்களில் நடிக்கவும், ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் பங்கேற்கவும் எனக்கு அதிக விருப்பம் உள்ளது.
எனக்கு எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த துறையில் வந்தேன். திரைப்படம் எப்படி தயாராகிறது என்பதையும் இங்கே வருவதற்கு முன்பு தெரியாது. ஒரு படத்துக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வோருவரின் உழைப்பையும், ஆனால் அதையெல்லாம் ஒருங்கிணைத்து முன்னேற்றும் பெரும் பொறுப்பு இயக்குநருக்கு மட்டுமே இருப்பதை பார்த்தபின், இயக்கத்திற்கான ஈர்ப்பு அதிகரித்தது. இயக்குதல் ஒரு சவாலான வேலை. எனக்கும் சவால் பிடிக்கும். அதனால் இயக்குநராகும் ஆசை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ‘உப்பென்னா’ படத்தின் இயக்குநர் புச்சி பாபு சார் தொடங்கி, நான் தற்போது பணிபுரியும் படங்களின் ஒவ்வொரு இயக்குநரையும் ஒரு குருவாக நினைத்து அவர்களிடமிருந்து இயக்கத் திறன்களை கற்றுக்கொண்டு வருகிறேன் என்று கிர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan