Paristamil Navigation Paristamil advert login

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் எப்போது?

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா  திருமணம் எப்போது?

30 மார்கழி 2025 செவ்வாய் 14:51 | பார்வைகள் : 251


தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. பல ஆண்டுகளாக இவர்களது காதல் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

தகவலறிந்த வட்டாரங்களின்படி, இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் மிக ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. உறவினர்கள் மற்றும் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்வு குறித்து இருவருமே இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், இவர்களது திருமணம் வரும் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையில் இவர்களது திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு ஹைதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. .
 

வர்த்தக‌ விளம்பரங்கள்