Paristamil Navigation Paristamil advert login

'ஜன நாயகன்' படத்தின் கதை இதுவா?

'ஜன நாயகன்' படத்தின் கதை இதுவா?

30 மார்கழி 2025 செவ்வாய் 13:51 | பார்வைகள் : 325


எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது ஜனநாயகன். மலேசியாவில் இந்தப் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமாக்கியுள்ளது. வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. கேரளா மற்றும் கர்நாடக, ஆந்திரா மாநிலத்தில் அதிகாலை 6 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்

பிக் பாஸ் சீசன் 9 ல் போட்டியாளராக வந்த பிரஜன் ஒரு பட வெளியீட்டு விழாவில் ஜனநாயகத்தின் கதை ஒரு குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகவும் செக்ஸுவல் அரெஸ்ட்மென்ட் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இந்த மாதிரியான கதைகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகின்றன. பெண் குழந்தைகளை வைத்து இந்த படம் இருப்பதாக கூறியுள்ளார்.

எனக்கும் பெண் குழந்தை தான் இருக்கிறது அதனால் பெண்கள் படும் கஷ்டமும் பாதுகாப்பின்மையும் எனக்கு தெரியும் இந்த சொசைட்டியில் பெண் குழந்தை வளர்ப்பது மிகவும் கடினம் இதை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டதாக பிரஜன் கூறியுள்ளார் ரசிகர்கள் மத்தியில் ஜனநாயகன் படம் இந்த கதை தானா என்று ரசிகர்கள் மத்தியில் பேச தொடங்கியுள்ளனர்.

எல்லா இடங்களிலும் பெண்கள் மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளுக்கும் தவறுகள் ஏற்பட்டு தான் வருகின்றது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய கதையே குட் டச் பேட் டச் என்பதைப்பற்றி தான் இருக்கின்றது. என்று பிரஜன் கூறியுள்ளார். பெண்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான நிலை ஏற்பட்டால் உடனடியாக தைரியமாகவும் அதைப்பற்றி பேச வேண்டும் அப்பொழுது தான் இந்த கொடுமை குறையும் என்றும் பிரஜன் ஓப்பனாக கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்