Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் கல்விக்கட்டணத்தை உயர்த்தும் சுவிட்சர்லாந்து அரசு

மீண்டும் கல்விக்கட்டணத்தை உயர்த்தும் சுவிட்சர்லாந்து அரசு

30 மார்கழி 2025 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 320


சுவிஸ் பல்கலைக்கழகங்கள், மீண்டும் கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுவருகின்றன.

சுவிஸ் பல்கலைக்கழகங்கள் சில, வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 2025இல் ஏற்கனவே மூன்று மடங்கு உயர்த்தியுள்ளன.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் மீண்டும் கல்விக் கட்டணத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுவருகின்றன.

2027 வாக்கில், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதி உதவியைக் குறைக்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளதே இந்த கல்விக் கட்டண உயர்வுக்கு காரணம் என சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் ETH சூரிக் பல்கலைக்கழகம், கல்விக்கட்டணத்தை 730 சுவிஸ் ஃப்ராங்குகளிலிருந்து 2,190 சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்த்தியுள்ளது.

அதாவது, கல்விக்கட்டணம் முன்பைவிட மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு குறித்து கடந்த டிசம்பரிலேயே அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

என்றாலும், ETH சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவ மாணவியரின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்த ஆண்டில், சுமார் 3,650 வெளிநாட்டு மாணவர்கள் சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள்.

கடந்த ஆண்டில் சூரிக் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையும் இதேதான்.

என்றாலும், கல்வி கற்க விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி கற்க வருவதில்லை. ஆக, மாணவர்கள் எண்ணிக்கை மாறுமா, அதாவது குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்