Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கணவனா? தோழனா? - யாரை தேர்ந்தெடுப்பாள் பெண்?

கணவனா? தோழனா? - யாரை தேர்ந்தெடுப்பாள் பெண்?

30 மார்கழி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 367


கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன.

பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான

கூறியிருப்பார்.

" ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை,

தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை.

நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல்.

ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே.

எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே

தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா?

இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா?

யாரைச் சொல்வாள்?

தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன்.

வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன்.

குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன்.

இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை.

தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால்,

தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள்.

தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்?

நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?

இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர்.

எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள்.

சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும்.

தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும்.

பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்