இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ பரவல் - 16 பேர் பலி!
29 மார்கழி 2025 திங்கள் 19:01 | பார்வைகள் : 191
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள மனடோ நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீ பரவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு 08.31 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீ பரவலின் போது மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும், அந்நாட்டு தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan