இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன் இவரா?
29 மார்கழி 2025 திங்கள் 15:27 | பார்வைகள் : 290
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன் குறித்த சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கௌதம் மேனன் கடைசியாக மலையாளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டியை வைத்து 'டோமினிக் அண்ட் லேடிஸ் பர்ஸ்' என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தனது அடுத்த படைப்பிற்கான வேலைகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான ரோஷன் மேகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. ரோஷன் நடிப்பில் அண்மையில் வெளியான 'சாம்பியன்' திரைப்படம் அவரது நடிப்பு திறமைக்காக பரவலாக பேசப்பட்டது.
கௌதம் மேனனின் ஸ்டைலான திரைக்கதையில் ஒரு இளம் தெலுங்கு நடிகர் இணைவது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு காதல் கதையா அல்லது ஆக்ஷன் கலந்த திரில்லரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.-
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan