மக்ரோனுக்கும் - புட்டினுக்கும் இடையே பேச்சுவாத்தை தற்போதைக்கு இல்லை! - எலிசே தகவல்!!
26 மார்கழி 2025 வெள்ளி 14:39 | பார்வைகள் : 1403
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே இப்போதைக்கு பேச்சுவார்த்தை இல்லை என எலிசே மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
விளாடிமிர் புட்டின் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுடன் உரையாட தயாராக இருப்பதாக ஒரு வாரத்துக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என இன்று டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை Élysée மாளிகை தெரிவித்தது.
பரிசுக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான இணக்கப்பாடு மிக குறைவாக உள்ளது. யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் மக்ரோன் பல்வேறு தடவைகள் புட்டினுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன.
இப்போது என்ன விலை கொடுத்தும் யுக்ரேனை காப்பாற்றுவது என முடிவெடுத்துள்ளதாக மக்ரோன் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே ‘புட்டினுக்கு அழைப்பு எடுப்பதற்குரிய எந்த முனைப்பும் இல்லை!’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan