கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் பலி
26 மார்கழி 2025 வெள்ளி 11:47 | பார்வைகள் : 308
கிளிமஞ்சாரோ மலையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் உயரமான மலை சிகரமான கிளிமஞ்சாரோவில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்கான நோயாளிகளை மீட்க சென்ற போது வடக்கு தான்சானியாவில் உள்ள மலைப்பகுதியில் கிளிமஞ்சாரோ ஏவியேஷனுக்கு(Kilimanjaro Aviation) சொந்தமான ஹெலிகாப்டரானது விபத்துக்குள்ளானது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13,000 அடி உயரத்தில் உள்ள பராஃபு முகாம் மற்றும் கிபோ சிகரத்திற்கு இடையே இந்த ஹெலிகாப்டர் விபத்தானது நடந்துள்ளது.
இந்த பகுதி மிகவும் குறைந்த காற்றழுத்தம் மற்றும் சவாலான வானிலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தின் போது அதில் பயணித்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, மருத்துவ உதவிக்காக அழைத்து வரப்பட்ட 2 வெளிநாட்டினர், உள்ளூர் மருத்துவர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் விமானி என 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் இன்னும் எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
தான்சானியா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் TCAA இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan