மிகப்பெரிய பட்ஜெட்டை அறிமுகப்படுத்திய ஜப்பான்
26 மார்கழி 2025 வெள்ளி 11:47 | பார்வைகள் : 217
ஜப்பான் அரசு, 2026 நிதியாண்டுக்கான வரலாற்றிலேயே மிகப்பெரிய 785 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 122 டிரில்லியன் யென்) பட்ஜெட்டை அங்கீகரித்துள்ளது.
பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பதும், கடன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
2026 நிதியாண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் 9.04 டிரில்லியன் யென் (சுமார் 58 பில்லியன் டொலர்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 2025-இல் இருந்த 8.7 டிரில்லியன் யென் செலவுகளை விட அதிகம்.
2023-2027 காலப்பகுதியில், ஜப்பான் 43 டிரில்லியன் யென் பாதுகாப்பு செலவுகளை ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
புதிய பட்ஜெட்டில், 100.1 பில்லியன் யென் மதிப்பில் “Shield” எனும் அடுக்கு கடலோர பாதுகாப்பு அமைப்பு உருவாக்கத்திற்கும், 1.1 பில்லியன் யென் நீண்டகால ட்ரோன் ஆய்வுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், பல தசாப்தங்களாக தனது பாதுகாப்பு செலவுகளை GDP-இன் 1 சதவீதம் அளவிற்கு மட்டுப்படுத்தி வந்தது.
ஆனால், 2022-ல் ஜப்பான் அரசு, 2027-க்குள் GDP-இன் 2 சதவீத செலவுகளை பாதுகாப்பிற்காக ஒதுக்க இலக்கு வைத்தது.
சமீபத்திய 18.3 டிரில்லியன் யென் கூடுதல் பட்ஜெட்டில், 1.7 டிரில்லியன் யென் பாதுகாப்பு மற்றும் தூதரக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், உலகின் மிகப்பெரிய பொது கடன் சுமையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
அதனால், அரசு “கடன் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவோம்” என வலியுறுத்தியுள்ளது.
மக்கள் எதிர்ப்பு இருந்தாலும், பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது, பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகிறது.
ஜப்பானின் 2026 பட்ஜெட், பாதுகாப்பு மற்றும் பொருளாதார சமநிலையை ஒருங்கிணைக்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan