இந்தியரை இங்கிலாந்துக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்- மான்டி பனேசர் யோசனை
26 மார்கழி 2025 வெள்ளி 11:47 | பார்வைகள் : 122
இங்கிலாந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக இந்தியரை நியமிக்க வேண்டும் என்று மான்டி பனேசர் அறிவுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
மேலும் இரு அணிகளும் விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லத்தின் பயிற்சியாளர் எதிர்காலம் உறுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிரெண்டன் மெக்கல்லமின் பயிற்சியாளர் ஒப்பந்தம் 2027 ம் ஆண்டு வரை உள்ள நிலையிலும், ஆஷஸ் தொடரின் தொடர் தோல்விகள் காரணமாக பிரெண்டன் மெக்கல்லம் மீதான விமர்சனம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மெக்கல்லத்திற்கு பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியை நியமிக்க இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் யோசனை வழங்கியுள்ளார்.
அதில், அவுஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை அறிந்த ஒருவரை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மேலும், அவுஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து அதிலிருந்து நமக்கான சாதகமான முடிவுகளை எடுக்க தெரிந்து இருக்க வேண்டும்.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது ரவி சாஸ்திரிக்கு தெரியும் என்று மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan