Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சீனாவின் அதிரடி நடவடிக்கை - பென்டகன் வெளியிட்ட ரகசிய அறிக்கை

சீனாவின் அதிரடி நடவடிக்கை - பென்டகன் வெளியிட்ட ரகசிய அறிக்கை

25 மார்கழி 2025 வியாழன் 17:51 | பார்வைகள் : 797


மங்கோலியா எல்லையில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சீனா நிலைநிறுத்தியுள்ளதாக பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனா, தனது அணு ஆயுத திறனை வலுப்படுத்தும் நோக்கில், மங்கோலியா எல்லை அருகே 100-க்கும் மேற்பட்ட DF-31 ஏவுகணைகளை (ICBM) அமைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) வெளியிட்ட ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதியதாக கட்டப்பட்ட 3 நிலத்தடி கட்டமைப்புகளில் (Silo Fields) இந்த ஏவுகணைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன.

DF-31, 2006-இல் அறிமுகமான மூன்றாம் தலைமுறை சாலிட்-ஃப்யூயல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) ஆகும்.

இதன் அடிப்படை மொடல் 7,000 முதல் 8,000 கி.மீ. தூரம் தாக்கும் திறன் கொண்டது.

DF-31A மற்றும் DF-31AG மொடல்கள் 11,000 முதல் 11,700 கி.மீ. வரை தாக்கும் திறன் பெற்றவை. இதனால் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் தாக்குதலுக்குள் வரும்.

ஒவ்வொரு ஏவுகணையும் 1 மெகாடன் அணு குண்டுகளை ஏந்தும் திறன் கொண்டது.

சில மொடல்களை MIRV (Multiple Independently Targetable Reentry Vehicle) வசதி கொண்டவை. அதாவது ஒரே ஏவுகணை பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை.

சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை 2024-இல் 600 என மதிப்பிடப்பட்டது. 2030-க்குள் இது 1,000-த்தை தாண்டும் என Pentagon எச்சரிக்கை விடுத்துள்ளது.

“No First Use” கொள்கையை பின்பற்றுவதாக சீனா கூறினாலும், இந்த விரிவாக்கம் உலகளாவிய பாதுகாப்பிற்கு சவாலாக பார்க்கப்படுகிறது.

நிலத்தடியில் பதுக்கிவைக்கப்பட்டதால், எதிரிகளின் முதல் தாக்குதலிலிருந்தே பாதுகாப்பு அதிகரிக்கும்.

Decoy warheads, penetration aids போன்ற தொழில்நுட்பங்கள், எதிரி ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்க்க உதவுகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்