ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் குண்டு வெடிப்பு - பொலிஸார் உப்பட மூன்று பேர் பலி
24 மார்கழி 2025 புதன் 12:32 | பார்வைகள் : 565
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இரண்டு பொலிஸார் உப்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொஸ்கோ நகரின் யெலெட்ஸ்காயா வீதியில் பொலிஸ் கார் ஒன்றுக்கு அருகே இரண்டு போக்குவரத்து பொலிஸார் "சந்தேகத்திற்கிடமான நபரை" கண்டனர்.
இதன்போது, சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, குண்டு வெடித்ததாக ரஷ்ய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்பில் காயங்களுக்குள்ளான இரண்டு பொலிஸாரும், அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, திங்கட்கிழமை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் கார் ஒன்றின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் உயிரிழந்தார்.
போக்குவரத்து பொலிஸார் கொல்லப்பட்டமை தொடர்பில் மொஸ்கோவில் குற்றவியல் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை குழுவின் ஊடப்பேச்சாளர் வெட்லானா பெட்ரென்கோ தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan