ட்ரம்ப் அதிரடி - அமெரிக்காவில் H1B விசா முறை இரத்து
24 மார்கழி 2025 புதன் 12:32 | பார்வைகள் : 831
டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவில் H1B விசா லாட்டரி முறையை இரத்து செய்ய உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை இந்தியர்கள் அதிகளவில் பெற்று பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் எச்-1பி விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார்.
H1B விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டொலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ட்ரம்ப் நிா்வாகம் அறிவித்தது.
மேலும் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்வது போன்ற தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தநிலையில் எச்-1பி விசா நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
அந்த எண்ணிக்கையை தாண்டி அதிக விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறை கடைபிடிக்கப்படும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் குலுக்கல் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிக சம்பளம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை தெரிவித்துள்ளதாவது,
H1B குலுக்கல் முறை இரத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் திகதி முதல் அமலுக்கு வரும். தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பல நிறுவனங்கள் தகுதியற்ற வா்களைக் குறைந்த சம்பளத்தில் பணியமா்த்த இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துகின்றன.
புதிய முறையினால் போட்டித்தன்மை அதிகரிப்பதோடு, திறமையானவா்களுக்கு மட்டுமே விசா கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தது.
மேலும் , இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, “அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதன்மூலம், அமெரிக்கக் குடிமக்களின் வேலை வாய்ப்பும், ஊதிய உயா்வும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan