Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரித்தானியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கிரெட்டா துன்பெர்க் கைது

பிரித்தானியாவில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கிரெட்டா துன்பெர்க் கைது

24 மார்கழி 2025 புதன் 12:32 | பார்வைகள் : 304


பிரித்தானியாவில் ஸ்வீடிஷ் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் கைது செய்யட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற சமூக ஆர்வலரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான கிரெட்டா துன்பெர்க் (22), பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றதற்காக லண்டனில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரெட்டா துன்பெர்க், “I support the Palestine Action prisoners. I oppose genocide” எனும் வாசகத்துடன் போராட்டத்தில் பங்கேற்றார்.

பிரித்தானிய அரசு, Palestine Action அமைப்பை தீவிரவாதக் குழுவாக அறிவித்துள்ளது. இதனால், அந்த அமைப்புக்கு ஆதரவாக பதாகை ஏந்திய துன்பெர்க், UK Terrorism Act கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் பொலிசார், அவரை 2026 மார்ச் மாதம் வரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

போராட்டக்காரர்கள், பிரித்தானியாவில் உள்ள ஒரு காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் சிவப்பு பெயிண்ட் வீசியுள்ளனர்.

அந்த நிறுவனம், இஸ்ரேலின் Elbit Systems என்ற பாதுகாப்பு நிறுவனத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“Prisoners for Palestine” என்ற குழு, பாலஸ்தீன ஆதரவு கைதிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டத்தை நடத்தியது.

2018-இல் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் வாராந்திர போராட்டம் நடத்தியதன் மூலம் உலகளவில் புகழ்பெற்றவர் கிரெட்டா.

2024-இல், லண்டனில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

2025 அக்டோபரில், Global Sumud Flotilla என்ற கப்பல் இயக்கத்தில் பங்கேற்றபோது, இஸ்ரேல் அவரை 478 பேருடன் கைது செய்து நாடு கடத்தியது.

கிரெட்டா துன்பெர்க் கைது, பஸ்தீன ஆதரவு போராட்டங்கள் மற்றும் பிரித்தானிய அரசின் தீவிரவாத சட்டங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்