ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாக்கு மலேசிய அரசின் அதிரடி!
24 மார்கழி 2025 புதன் 11:36 | பார்வைகள் : 247
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது விஜய்யின் கடைசி படம். மேலும், முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி விஜய்க்கான படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு மட்டும் ரூ.275 கோடி சம்பளம் என்று சொல்லப்படுகிறது. ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ள தளபதி கச்சேரி மற்றும் ஒரு பேரே வரலாறு ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களை கொண்டாட செய்தது.
இந்த நிலையில் தான் இன்னும் 3 நாட்களில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை சென்னையில் நடக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக முதல் முறையாக விஜய் நடித்துள்ள ஒரு படம் வெளிநாட்டில் அதுவும் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் மட்டுமின்றி அரசியல் வருகைக்கான பிரச்சார மேடையாக இந்த இசை வெளியீட்டு விழாவை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் மலேசியா போலீஸ் அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கையாக பல விதமான கண்டிஷன்களை படக்குழுவினருக்கு போட்டுள்ளனர். அது என்ன என்றால், இந்த இசை வெளியீட்டு விழாவை ஜன நாயகன் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவாக மட்டுமே நடத்த வேண்டும். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சிக்கான மேடையாக பயன்படுத்தக் கூடாது. கட்சிக் கொடியை பயன்படுத்தவும் கூடாது. அரசியல் வசனங்கள், உரை என்று எதுவும் இடம் பெறக் கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெறும் தகவல் மட்டுமே தவிர இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடக்க மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, தமிழகத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் ரசிகர்களின் கூட்டல் அலை மோதும். இதன் காரணமாக உயிர் சேதம் ஏற்படுவதற்கு கூடா வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் தான் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தவில்லை. இதே போன்று மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ஆளும் கட்சியின் தாக்கம் இருக்க கூடும் என்பதால் தான் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், ரெபேகா மோனிகா ஜான், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபா பாஸ்கர், ரேவதி, நிழல்கள் ரவி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பல காட்சிகளின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கின்றது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு போட்டியாக இப்போது பராசக்தி படம் வெளியாக இருக்கிறது. முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஜனவரி 10ஆம் தேதியே படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஜன நாயகன் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். எப்படியும் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவித்து தமிழகத்தில் ரூ.1000 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற சாதனையை ஜன நாயகன் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan