Paristamil Navigation Paristamil advert login

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் வேதனையை பகிர்ந்த ரோஹித் சர்மா

கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் வேதனையை பகிர்ந்த ரோஹித் சர்மா

23 மார்கழி 2025 செவ்வாய் 13:12 | பார்வைகள் : 119


தோல்விக்கு பிறகு கிரிக்கெட் விளையாட வேண்டாம் என நினைத்தாக ரோஹித் சர்மா பேசியுள்ளார்.

2023 உலக கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

குருகிராமில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் யூனியன் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ரோஹித் சர்மா, இந்த தோல்வியால் ஏற்பட்ட மன வேதனை குறித்து பேசியுள்ளார்.

இதில் பேசிய அவர், "உலகக் கோப்பையை வெல்வதே எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, 2023 ODI உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி.

ஆனால் எல்லோரும் ஏமாற்றமடைந்தனர், என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அந்த உலகக் கோப்பைக்காக 2022 ஆம் ஆண்டில் நான் அணித்தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து தயாரானேன்.

அதனால் அது நடக்காதபோது, ​​நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். என் உடலில் எந்த சக்தியும் இல்லை. ஒரு கட்டத்தில், இந்த விளையாட்டு என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டதால், இனி கிரிக்கெட் விளையாட வேண்டாம் என நினைத்தேன்.

ஒரு விடயத்​தில் அதி​க​மாக முதலீடு செய்​து, அதற்​கான பலன் கிடைக்​க​வில்லை என்​றால், மிகுந்த ஏமாற்றமடைவது இயல்பானது. எனக்​கும் அது​தான் நடந்​தது.

ஆனால் வாழ்க்கை அங்கேயே முடிவடையாது என்பதையும் நான் அறிந்திருந்தேன். கிரிக்கெட் நான் உண்மையிலேயே விரும்பும் ஒன்று. அது என் முன்னால் இருந்தது.

அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது என்பதை நான் எனக்குள் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தேன். மெதுவாக இழந்த சக்தியை பெற்று மீண்டும் மைதானத்திற்கு வந்தேன். மீண்டும் என்னை பழைய நிலைக்குக் கொண்டுவர எனக்கு 2 மாதங்கள் ஆனது" என கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்