Paristamil Navigation Paristamil advert login

ஆசியாவின் கடலுக்கடியிலான மிகப்பெரிய தங்கப் படிமம்!

ஆசியாவின் கடலுக்கடியிலான மிகப்பெரிய தங்கப் படிமம்!

23 மார்கழி 2025 செவ்வாய் 11:12 | பார்வைகள் : 134


கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ள போதிலும், தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

2021 இல் இருந்து தங்கப் படிமங்களைக் கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வரும் நிலையில் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 இலட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தவிர, ஜின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தில் உள்ள மலையில், 10 இலட்சம் கிலோ தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்டமான தங்கப் படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.

இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 இலட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக லைஜோ பகுதி, சீனாவின் தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்