Paristamil Navigation Paristamil advert login

பராசக்தி பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசுவாரா?

பராசக்தி பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசுவாரா?

23 மார்கழி 2025 செவ்வாய் 06:45 | பார்வைகள் : 1340


பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த ‛ஜனநாயகன்', சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படங்கள் வெளியாக உள்ளன. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் வீண் போட்டி, பிரச்னைகளை தவிர்க்க, ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படமும், ஜனவரி 14ம் தேதி பராசக்தி படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முடிவு தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இதனால், இந்த படங்களின் முதல் நாள் வசூல், முதல்காட்சி வசூலுக்கு பாதிப்பு வராது. இரண்டு படங்களும் நல்ல லாபத்தை பெற்று தரும் என நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், இப்போதைய நிலவரப்படி, ஜனவரி 10ம் தேதி முன்னதாகவே பராசக்தி வருகிறது. அந்த படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. இது விஜய்க்கு வைக்கப்படும் செக் என்று தகவல்கள் கசிகின்றன. இதை கேட்டு விஜய் தரப்பு அதிர்ந்துள்ளதாக தகவல்.

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. இப்படி முன்னமே வருவதில் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கும் உடன்பாடு இல்லை. கோட் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தது, அவரிடம் இருந்து துப்பாக்கி வாங்கியது போன்ற காரணங்களால், விஜயுடன் அவர் நல்ல நட்பில் இருக்கிறார். இந்த போட்டி அதை பாதிக்கும் என நினைக்கிறார். இப்போதே அவரை விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திட்ட ஆரம்பித்ததால் கவலைப்படுகிறார். ஆகவே, அவர் அதற்கு சம்மதிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடைய ஜனவரி 3ம் தேதி பராசக்தி பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் குறித்து சிவகார்த்திகேயன் பேசுவாரா? தனது தரப்பு விளக்கங்களை அளிப்பாரா? மலேசியாவில் நடக்கும் ஜனநாயகன் பாடல் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் குறித்து, பராசக்தி குறித்து விஜய் நேரடியாக அல்லது மறைமுகமாக பேசுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்