Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

23 மார்கழி 2025 செவ்வாய் 12:24 | பார்வைகள் : 173


தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதாக இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துள்ளன. இரு நாட்டு பிரதமர்களும் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடி, இதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பு சரக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் 100 சதவீத ஏற்றுமதிகளுக்கும் நியூசிலாந்து சுங்க வரி விலக்கு வழங்க முன்வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளது.

இதேபோல, நியூசிலாந்தின் 95 சதவீத ஏற்றுமதிகளுக்கு, சுங்க வரி விலக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தற்போதைய வரிவிதிப்பு

* இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் சராசரி சுங்க வரி: 2.30%

* நியூசிலாந்து பொருட்களுக்கு இந்தியாவில் சராசரி சுங்க வரி: 17.80%

கடந்து வந்த பாதை

2025

மார்ச் 16

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா வந்திருந்தபோது, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் அதிகாரப் பூர்வமாகத் துவங்கப்பட்டன

மே 5 - 9

முதல் சுற்றுப் பேச்சு டில்லியில் நடைபெற்றது

ஜூலை 14 - 25

இரண்டாம் சுற்றுப் பேச்சு மீண்டும் டில்லியில்

செப்டம்பர் 15 - 19

மூன்றாம் சுற்றுப் பேச்சு நியூசிலாந்தின் குயின்ஸ் டவுன் நகரில் நடைபெற்றது

அக்டோபர் 13 - 17

டில்லியில் இடைக்காலச் சுற்றுப் பேச்சு நடத்தப்பட்டது

நவம்பர் 3 - 7

நான்காம் சுற்றுப் பேச்சு, நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்றது

டிசம்பர் 22

பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் தொலைபேசியில் உரையாடி, பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அறிவித்தனர் 2026 மார்ச் மாதத்துக்கு முன் ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இரு நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்ததும், ஜூன் மாதத்துக்கு பின் ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்

வர்த்தக‌ விளம்பரங்கள்