Paristamil Navigation Paristamil advert login

தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

23 மார்கழி 2025 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 160


மற்ற மாநிலங்களை விட தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் பேசியதாவது:திமுக, நூற்றாண்டு காலத்திலும் ஆட்சியில் இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும். திமுக என்றாலே அது போராட்டம், சிறை, தியாகம் தான்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது காரணம் தொண்டர்கள் தான். அரசியலுக்கு பலரும் சொகுசு எதிர்பார்த்து வருவார்கள். ஆனால், திமுகவுக்கு அந்த சொகுசு கிடையாது. சில கட்சிகள் சின்ன வழக்குக்கு கூட கட்சி விட்டு கட்சி தாவுவார்கள். கொடூரமான அடுக்குமுறைகள் , வன்முறைகளை தாண்டி கட்சிக்காக வாழ்ந்தவர்கள் திமுக.

திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது.அரசியல் புரட்சியின் அடையாளமாக திமுக விளங்குகிறது.

நூறாண்டுகள் கழித்தும் நீதிக்கட்சியின் நீட்சியாக திராவிட மாடல் அரசு நீடிக்கிறது. பல மாநிலங்களை விட பலவற்றில் நாம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களை விட தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.

காலங்கள் மாறுகின்றன. எதிரிகளும் மாறுகிறார்கள். திமுக கம்பீரமாக நிற்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது திமுக. கண்முன் தெரியும் திமுக அரசின் சாதனைகளை எதிரிகள் ஏற்க மறுக்கின்றனர். திமுக அனைவருக்குமான ஆட்சியாக செயல்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்