மொஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு - ரஷ்ய இராணுவ ஜெனரல் பலி
22 மார்கழி 2025 திங்கள் 16:20 | பார்வைகள் : 664
மொஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய இராணுவ ஜெனரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் திங்கட்கிழமை காலை கார் ஒன்றின் கீழ் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு,
ரஷ்யாவின் தலைநகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்துக்கு அருகில் கார் நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த இடத்துக்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
சர்வரோவ் குண்டு தாக்குதலில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் உயிரிழந்தார். 56 வயதுடைய சர்வரோவ் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக செயல்பட்டார்.
மேலும், கொலை மற்றும் சட்டவிரோத வெடிபொருள் கடத்தல் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய உளவுத்துறை சேவைகளின் ஈடுபாட்டுடன் இந்த குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரேன் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
1990களிலும் 2000களின் ஆரம்பத்திலும் இடம்பெற்ற ஒசெத்திய–இங்குஷ் மோதல் மற்றும் செச்சன் போர்களின் போது சர்வரோவ் போரில் ஈடுபட்டிருந்தார்.
மேலும், 2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் சிரியாவில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளுக்கும் அவர் தலைமை வகித்தார் என ரஷ்ய ஊடகங்களின் தகவல் வெளியிட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் ஆரம்பித்ததில் இருந்து, ரஷ்ய தலைநகரில் பல இராணுவ அதிகாரிகள் குறிவைக்கப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மொஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் கொல்லப்பட்டார்.
இராணுவத் தளபதி ஜெனரல் இகோர் கிரில்லோவ் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கூட்டர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சாதனம் தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்பட்டதில் உயிரிழந்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan