Paristamil Navigation Paristamil advert login

பட்ஜெட் இல்லை, நிதி இல்லை! - MaPrimeRénov கொடுப்பனவுகளும் இல்லை!!

பட்ஜெட் இல்லை, நிதி இல்லை! - MaPrimeRénov கொடுப்பனவுகளும் இல்லை!!

22 மார்கழி 2025 திங்கள் 13:12 | பார்வைகள் : 1089


வீடு திருத்தப்பணிகளுக்கான வழங்கப்படும் MaPrimeRénov கொடுப்பனவுகள் ஜனவரி 1, 2026 முதல் நிறுத்தப்படும் என வீடமைச்சர் Vincent Jeanbrun அறிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நிறைவேற்றுவதில் ஐஇதுவரை எந்த முன்னேற்றமும் காணாமல் இருப்பதால், போதிய நிதி இல்லை எனவும், இதனால் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்படுவதகாவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தார்.

‘நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். பட்ஜெட் இல்லை. இப்போது அரசு சிறப்பு சட்டமூலம் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் நாட்டை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது. ஆனால் அதில் கொடுப்பனவுகள் வழங்குவற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அதனால் MaPrimeRénov கொடுப்பனவுகளுக்கும் வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த ‘சிறப்பு சட்டமூலம் உண்மையில் ஒரு பட்ஜெட் இல்லை. அது தற்காலிக ஒரு பிடிமானம். இது அனைத்து வித கொடுப்பனவுகளையும் கைவிடுகிறது!’ எனவும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்