Paristamil Navigation Paristamil advert login

பரிஸ்–அஜாச்சியோ ஏர் பிரான்ஸ் விமானம், லியோனில் அவசர தரையிறக்கம்!!!

பரிஸ்–அஜாச்சியோ ஏர் பிரான்ஸ் விமானம்,  லியோனில் அவசர தரையிறக்கம்!!!

21 மார்கழி 2025 ஞாயிறு 12:44 | பார்வைகள் : 1412


சனிக்கிழமை மாலை, பரிஸிலிருந்து அஜாச்சியோவுக்கு (Ajaccio) 173 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் பிரான்ஸ் AF 7721 விமானம், பறக்கும் போது ஏற்பட்ட எஞ்சின் கோளாறு காரணமாக அவசரமாக லியோனில் தரையிறக்கப்பட்டது. 

சுமார் மாலை 6 மணியளவில், கிளெர்மோன்-ஃபெரான் (Clermont-Ferrand) பகுதியின் மேல் பறந்துகொண்டிருந்தபோது, சுமார் 30 நிமிடங்கள் பறந்த பின்னர், விமானத்தில் பெரும் சத்தமும் பலத்த அதிர்வுகளும் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். சிலர் விமானத்தின் இடது இறக்கையில் தீப்பற்றியதைப் பார்த்ததாக கூறியுள்ளனனர். விமானி, பறக்கும் போதே இடது எஞ்சின் செயலிழந்ததாக விளக்கியுள்ளார்.

இந்த சம்பவம் விமானத்தின் உள்ளே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பயணிகள் பீதியடைந்து அழுதனர்; விமானம் திடீரென உயரத்தை இழந்ததால் அச்சம் மேலும் அதிகரித்தது. FlightRadar தகவலின்படி, விமானம் குறுகிய நேரத்தில் மிகக் குறைந்த உயரத்துக்கு இறங்கியது. பட்டன்கள் “எல்லாம் ஒளிர்ந்தது, எல்லாம் மின்னியது” என பயணிகள் கூறிய நிலையில், விமானம் பாதுகாப்பாக லியோனில் தரையிறக்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்