Paristamil Navigation Paristamil advert login

பிப்ரவரி 1ல் தாக்கலாகுமா மத்திய பட்ஜெட்?

பிப்ரவரி 1ல் தாக்கலாகுமா மத்திய பட்ஜெட்?

20 மார்கழி 2025 சனி 05:42 | பார்வைகள் : 268


மத்திய பட்ஜெட், கடந்த 2017- முதல் பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2026ல், பிப்., 1ல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்றாலும், பட்ஜெட் தாக்கல் போன்ற மிக முக்கிய நிகழ்வுகளுக்காக பார்லி., கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 2020ல், கொரோனா தொற்று காலத்தின் போது அவசர தேவைகளுக்காக ஞாயிற்றுக்கிழமை பார்லிமென்ட் கூடியது.

இந்நிலையில், 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்., 1ல் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்