Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷில் பற்றி எரியும் ஊடக நிறுவனங்கள்...!

பங்களாதேஷில் பற்றி எரியும் ஊடக நிறுவனங்கள்...!

19 மார்கழி 2025 வெள்ளி 15:35 | பார்வைகள் : 364


பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய வன்முறையால் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் , போராட்டக்காரர்கள் ' டெய்லி ஸ்டார்' மற்றும் ' புரோத்தோம் அலி' உள்ளிட்ட பங்களாதேஷின் பத்திரிகை அலுவலகங்களைத் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த 25 பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பங்களாதேஷில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

கர்வான் பஜார் பகுதியில் உள்ள பங்களாதேஷின் முன்னணி ஆங்கில மொழி பத்திரிகையான ' டெய்லி ஸ்டார்' அலுவலகம் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது

இதனால் பல பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

' டெய்லி ஸ்டார்' அருகே உள்ள ' புரோத்தோம் அலோ' என்ற வங்காள மொழி பத்திரிகை அலுவலகமும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தப்பட்டதோடு பல பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்