Paristamil Navigation Paristamil advert login

மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய்

மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய்

18 மார்கழி 2025 வியாழன் 15:18 | பார்வைகள் : 199


மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நிஜாமாபாத் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் - லெட்சுமி தம்பதிக்கு 2 மாத ஆண்குழந்தை உள்ளது.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தாயார் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார்.

பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்களின் உதவியுடன் புனேயைச் சேர்ந்த எ ர் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார்.

எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

தாய் உட்பட குழந்தையை விலைக்கு வாங்கிய தரப்பினரை அந்த மாநில பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்