‘பராசக்தி’ ஓடிடி உரிமை இத்தனை கோடியா…?
16 மார்கழி 2025 செவ்வாய் 15:17 | பார்வைகள் : 211
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் ‘ஜன நாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. ‘ஜன நாயகன்’ விஜயின் கடைசி படம் என்பதும், ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனின் 25-வது படம் என்பதும் கவனிக்கத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரிக்கிறார். ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழில் நடிகையாக அறிமுகமாகிறார். அதர்வா, பசில் ஜோசஃப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் 100-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என கூறப்பட்டதால், இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டியதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது ஓடிடி நிறுவனம் ஒன்று பெரும் தொகைக்கு ‘பராசக்திய படத்தின் உரிமையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ5 ஓடிடி நிறுவனம் ரூ.52 கோடிக்கு ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளதாம். சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம். சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு ஓடிடி உரிமம் விற்கப்பட்ட படம் இது தான் என கூறப்படுகிறது. ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
அதே சமயம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் விஜயின் ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையும் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற ஓடிடி நிறுவனங்களிடையே போட்டி நிலவியதாக கூறப்பட்டது. அந்த வகையில் ‘ஜன நாயகன்’ ஓடிடி உரிமையை ரூ.120 கோடிக்கு அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டில் வெளியாகும் படங்களில் அதிக விலைக்கு வாங்கிய படமாக இது இருக்கும் என தெரிகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan