Paristamil Navigation Paristamil advert login

புதிய குடும்ப ஸ்கூட்டர் வடிவமைப்பிற்கு காப்புரிமை பேருள்ள Ather

புதிய குடும்ப ஸ்கூட்டர் வடிவமைப்பிற்கு காப்புரிமை பேருள்ள Ather

16 மார்கழி 2025 செவ்வாய் 07:39 | பார்வைகள் : 479


பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Ather Energy, தனது புதிய EL பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட குடும்பத்திற்கேற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பை காப்புரிமை பெற்றுள்ளது.

இதன் மூலம், 2026 பண்டிகை காலத்தில் வெளியிடப்படவுள்ள புதிய மாடலுக்கான பாதை தெளிவாகியுள்ளது.

Ather இதுவரை 450 மற்றும் Rizta எனும் இரண்டு மாடல்களையே சந்தையில் வைத்திருந்தது. ஆனால் EL பிளாட்ஃபார்ம் அறிமுகமானதன் மூலம், பல்வேறு உடல் வடிவமைப்புகளுடன் 3 வகை ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட உள்ளன.

EL01 எனும் கான்செப்ட் மாடலை 2025 Community Day-ல் நிறுவனம் வெளியிட்டது. தற்போது காப்புரிமை பெற்றுள்ள வடிவமைப்பு கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமாக உள்ளது.

வடிவமைப்பு அம்சங்கள்:

14/12 அங்குல அலாய் வீல்கள்

புதிய swingarm-mounted மோட்டார்

பெரிய LED DRL மற்றும் LED tail-light

எளிமையான, குடும்பத்திற்கேற்ற uncluttered design

7 அங்குல TFT டிஸ்ப்ளே (கான்செப்டில் இருந்தது, உற்பத்தி மாடலிலும் வரும் வாய்ப்பு)

EL பிளாட்ஃபார்ம் 2kWh முதல் 5kWh வரை பேட்டரி கொள்ளளவை தாங்கக்கூடியது. இதனால், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு ரேஞ்ச் விருப்பங்கள் வழங்கப்படலாம்.

இந்த புதிய EL பிளாட்ஃபார்ம் மாடல்கள், தற்போதைய Rizta மற்றும் 450 மாடல்களுடன் இணைந்து சந்தையில் இருக்கும். குடும்ப ஸ்கூட்டர் பிரிவில் அதிக வரவேற்பு இருப்பதால், Ather-ன் புதிய தயாரிப்பு அதன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்