Paristamil Navigation Paristamil advert login

NATO இல் இருந்து விலக முடிவு; முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்!

NATO இல் இருந்து விலக முடிவு; முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்!

15 மார்கழி 2025 திங்கள் 11:01 | பார்வைகள் : 404


NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதற்காக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வநதபோதும் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்லதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.

அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷியாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுனார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்