Paristamil Navigation Paristamil advert login

ஆதிக் - அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தின் நாயகி இவரா..?

ஆதிக் - அஜித் கூட்டணியில் உருவாகும் படத்தின் நாயகி இவரா..?

14 மார்கழி 2025 ஞாயிறு 12:15 | பார்வைகள் : 213


அஜித் நடிப்பில் இந்த ஆண்டு ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாகின. இந்தப் படங்களைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். இதனால் சினிமாவிலிருந்து சின்னதாக ப்ரேக் எடுத்திருக்கிறார்.  மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அஜித் பங்கேற்ற கார் திடீரென பழுதாகி நடு வழியில் நின்றது. ரேடியேட்டர் பழுதானதால் அவரது அணியினரால் போட்டியை தொடர முடியாத சூழல் உருவானது. இதுதொடர்பாக அஜித் குமாரிடம் கேட்டபோது, கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.

மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அங்கு செல்லும் பிரபலங்கள், அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். அண்மையில் அஜித்குமாரை, நடிகர் சிலம்பரசன் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ லீலா மலேசியாவில் நடிகர் அஜித்குமாருடன், நடிகை ஸ்ரீலீலா செல்ஃபி எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.  தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா மலேசியா சென்றிருக்கும் நிலையில், அங்கு அஜித்குமாரை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

விரைவில் கார் பந்தயத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘ஏகே64’ என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். கார் ரேஸ் தொடர்பான கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் நடனத்தால் கவனம் ஈர்த்த ஸ்ரீலீலா தமிழில், சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் அவருக்கு முதல் படம். அடுத்த படம் அஜித்துடன் இருக்கும் என கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்