Paristamil Navigation Paristamil advert login

ரூ.100க்கு T20 கிரிக்கெட் உலக கோப்பை டிக்கெட்

ரூ.100க்கு T20 கிரிக்கெட் உலக கோப்பை டிக்கெட்

12 மார்கழி 2025 வெள்ளி 04:50 | பார்வைகள் : 110


2026 T20 கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது.

 

2026 ஐசிசி T20 உலகக்கோப்பை பிப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

 

20 அணிகள் பங்குபெற உள்ள தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

 

மொத்தம் 55 போட்டிகள் உள்ள இந்த தொடரில், 33 போட்டிகள் இந்தியாவிலும், 22 போட்டிகள் இலங்கையிலும் நடைபெற உள்ளது.

 

இந்தியாவில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், இறுதி போட்டி உட்பட 7 போட்டிகளும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளும் நடைபெற உள்ளது.

 

மேலும், டெல்லி அருண் ஜெட்லி மைதானதில் 6 போட்டிகளும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரையிறுதி உட்பட 7 போட்டிகளும், மும்பை வான்கடே மைதானத்தில் 2 அரையிறுதி உட்பட 8 போட்டிகளும் நடைபெற உள்ளது.

 

இதே போல், இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாச மைதானதில் 1 அரையிறுதி மற்றும் இறுதி போட்டி உட்பட 10 போட்டிகளும், எஸ்.எஸ்.சி கிரிக்கெட் மைதானத்தில் 5 போட்டிகளும், கண்டி பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் 7 போட்டிகளும் நடைபெற உள்ளது.

 

இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால் , இறுதிப்போட்டி இலங்கையில் நடைபெறும், இல்லையெனில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

 

இதற்கான முதல் கட்ட டிக்கெட் விற்பனை 11-12-2025 மாலை 6:45 மணிக்கு தொடங்க உள்ளது.

 

போட்டி நடைபெறும் நாள், மைதானம் ஆகியவற்றை தேர்வு செய்த பின்னர், இருக்கை பிரிவு மற்றும் டிக்கெட் எண்ணிக்கையை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

சில போட்டிகளுக்கான டிக்கெட் விலை இந்தியாவில் ரூ.100 முதலும், இலங்கையில் ரூ.1000 முதலும் கிடைக்க உள்ளது. 2 மில்லியன் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்