Paristamil Navigation Paristamil advert login

ரூ.199-ல் இந்தியாவில் Google AI Plus சந்தா அறிமுகம்

ரூ.199-ல் இந்தியாவில் Google AI Plus சந்தா அறிமுகம்

11 மார்கழி 2025 வியாழன் 13:13 | பார்வைகள் : 144


Google நிறுவனம் இந்தியாவில் புதிய AI Plus subscription திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு வசதிகளை மலிவான விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

புதிய திட்டத்தின் விலை மாதம் ரூ.399-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிய பயனர்களுக்கு அறிமுக சலுகையாக முதல் 6 மாதங்களுக்கு மாதம் ரூ.199 மட்டுமே செலுத்த வேண்டும்.

 

இந்த AI Plus திட்டத்தில், Google-ன் மிக திறன்வாய்ந்த Gemini 3 Pro மாடல், Nano Banana Pro மூலம் மேம்பட்ட image Creation மற்றும் Edit, Veo 3.1 வழியாக video generaton, Flow எனும் படைப்பாற்றல் கருவிகள், Gmail மற்றும் Google Docs-ல் நேரடி Gemini இணைப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.

 

மேலும், இந்த திட்டத்தில் 200 GB cloud storage வழங்கப்படுகிறது. இது இலவச திட்டத்தில் கிடைக்கும் 15 GB-ஐ விட 13 மடங்கு அதிகம்.

 

கூடுதலாக, NotebookLM ஆராய்ச்சி உதவியாளருக்கு விரிவான அணுகல், குடும்பப் பகிர்வு (அதிகபட்சம் 5 உறுப்பினர்கள்) போன்ற வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

Google-ன் AI subscription-களில், இலவச திட்டம் (100 credits, 15 GB storage), AI Plus (200 credits, 200 GB storage), மற்றும் AI Pro (1,000 credits, 2 TB storage, மாதம் ரூ.1,950) என மூன்று நிலைகள் உள்ளன.

 

இந்த புதிய திட்டம், இந்தியாவில் AI பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், இலவச திட்டம் மற்றும் AI Pro திட்டம் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்