Paristamil Navigation Paristamil advert login

வடக்கு, கிழக்கில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள விடயத்தை வெளிப்படுத்திய சாணக்கியன்

வடக்கு, கிழக்கில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள விடயத்தை வெளிப்படுத்திய சாணக்கியன்

2 கார்த்திகை 2025 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 418


வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருளை விட சாராயம் மற்றும் கசிப்பு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்து பேசிய அவர், “கிளிநொச்சி பிரதேசத்தில் 4500 வாக்காளர்களுக்கு ஒரு மதுபான விற்பனை நிலையம் இருக்கிறது. 4500 வாக்காளர்களுக்கு ஒரு பாடசாலை இருப்பது சந்தேகத்திற்கு உரியதாகும்.

கிளிநொச்சி பிரதேசத்தில் 21 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும் கடந்த அரசாங்கத்தில் 17 புதிய மதுபான நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வித அதிகாரமும் இல்லாத, கட்டுப்பாற்ற அரசாங்கத்தின் கொள்கையில், பாதாள குழுவினரா அல்லது போதைப்பொருள் கடத்தல்காரரா? யாரும் துப்பாக்கி சூடு நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாடு என்ற வகையில் நீதிமன்றம், பொலிஸ் ஆகியன இருக்கின்றன. எனவே, பாதாள குழு, போதைப்பொருள் மோசடி என்றால் சட்டத்தின் படி தண்டனையே பெற்றுக் கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்