புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடும் சன் பிக்சர்ஸ்?
31 ஐப்பசி 2025 வெள்ளி 16:33 | பார்வைகள் : 213
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் மாறி உள்ளது. அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் மதிப்பு உலக அளவில் உயர்ந்துள்ளது.அடுத்ததாக சன் பிக்சர்ஸ் அதிக பொருட்செலவில் ஜெயிலர் 2 திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இதேபோன்று அல்லு அர்ஜுன் நடிக்கும் அவரது 22 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இயக்குனர் அட்லியுடைய ஆறாவது திரைப்படமாகும். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தனது அடுத்த படத்துடைய அறிவிப்பை நாளை வெளியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சன் பிக்சர்ஸின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இணையும் படமாக இருக்கும் என்று தங்களது கணிப்புகளை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan